மனதில் உறுதி வேண்டாம்!
₹100.00
‘எங்கே நிம்மதி?’ என்று தேடித்தேடி அலைந்துகொண்டு இருப்பவர்கள்தான் இங்கே அதிகம்! இதற்கு இங்கே பொதுவாக சொல்லப்படும் ஒரே அறிவுரை & ‘மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்பதே! ஆனால், அது அத்தனை எளிதான செயலா? அப்படியானால் வேறு என்னதான் செய்வது? இதோ, ‘மனதில் உறுதி வேண்டாம்’ என்று புதியதொரு பாதையைக் காட்டி, விளக்குகிறார் ஸ்ரீ பகவத் அவர்கள்.
‘ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான ஆயுள் இருப்பதுபோல நமது பிரச்னைகளான துயரம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கும் ஒரு ஆயுள் உள்ளது. ஒரு விநாடியில் 60&ல் ஒரு பங்கு நேரம் தான் அந்த ஆயுள். அப்படியொரு மின்னலாக சிதறி மறைந்து விடும் உணர்ச்சியை, நாம்தான் நம்முடைய போராட்டத்தால் புதுப்பித்துக்கொண்டு ஆண்டுகள் கணக்கில் அவதிப்படுகிறோம்’ என்கிற ஸ்ரீபகவத் ஐயாவின் வரிகள் உங்களின் ஞாபக அறையில் சிறை வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் நேரங்களில் எல்லாம் நினைவூட்டி, உங்களை மீட்டுக் கொள்ளலாம்.
மிகப்பெரும் ஞானிகள் மட்டுமே புரிந்துகொண்ட மனதின் சூட்சுமத்தை எளிய கதைகள் மூலம் பாமரனுக்கும் விளக்கப் புகுந்திருக்கும் ஸ்ரீபகவத் ஐயா, எல்லோரும் பயன்பெற திருக்கோஷ்டியூர் கோயில் விமானத்தின் மீதேறி நாராயண மந்திரத்தை உபதேசித்த ஸ்ரீராமானுஜர் போலத்தான் தெரிகிறார். ‘செய்வதற்கு இங்கே எதுவுமே இல்லை’ என்ற ஒற்றை வரியே இவருடைய உயரிய மந்திரமாக ஒலிக்கிறது.
Reviews
There are no reviews yet.