மனம் என்னும் மாமருந்து!
₹100.00
மருந்தைவிட ஆற்றல் மிக்கது மனம் என்பதை அடிக்கடி படித்திருந்தாலும், நம்மிடையே நோய்களுக்கும் பஞ்சமில்லை! நம் முன்னோர்கள் எத்தனை சிக்கலான உடல் தொந்தரவு என்றாலும், ‘குலசாமிக்கு படையல் வெச்சா சரியா போயிடும்’ என்று நம்பினார்கள். அப்படியே குணமானது. காரணம், குலசாமி மீது அவர்கள் வைத்திருந்த ஆழமான ‘நம்பிக்கை’!
நாமோ எதையும் கேள்வி கேட்கப் பழகியவர்கள். சாமிக்கும் படையலுக்கும் நோய்க்கும் என்ன தொடர்பு என்று ஆராய்கிறோம். அது மனதை நம்பிக்கை வசப்படுத்தும் மறைமுகமான முயற்சி என்பது புரிந்தாலும் சரி.. புரியாவிட்டாலும் சரி.. அங்கே சாமி காணாமல் போகிறது. நம்பிக்கையும் ஆட்டம் காண்கிறது. அப்புறம் எங்கே நோய் குணமாவது?
மனதின் மகாசக்தியை வெற்று வார்த்தைகளில் பிரசங்கம் செய்வதில் அர்த்தமில்லை. எதற்கும் அறிவியல்பூர்வ விளக்கமும், தெளிவான செய்முறை வழிகாட்டுதல்களும் நமக்கு தேவைப்படுகிறது. அப்படி ‘நோய்களை குணப்படுத்த மனதையும் எண்ணங்களையும் எப்படி முறைப்படுத்த வேண்டும்’ என்பதை இந்நூலில் அறிவியல்பூர்வமாக விளக்குகிறார், அக்குஹீலர் அ.உமர் பாரூக். எத்தனை ஆழமான விஷயத்தையும் மிகமிக எளிமையாக விவரிப்பது இவருக்கு கைவந்த கலை. நூலை படித்து முடிக்கும்போது நீங்களே அதை உணர்வீர்கள்.
நோய்களை மனதால் குணப்படுத்திக் கொள்ளும் நுட்பங்களை கற்றுக் கொள்வோம்.
Reviews
There are no reviews yet.