சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை

 100.00

Category:

Description

‘சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாமே தவிர, அதை முழுமையாக குணப்படுத்த முடியாது’ என்றுதான் ஆங்கில மருத்துவம் நமக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது.

இந்நிலையில், ‘சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.. அதுவும், மருந்து மாத்திரையே இல்லாமல்’ என்ற ஒரு வாதத்தை முகநூலில் இயங்கும் முன்னோர் உணவுக் குழுவில் (https://www.facebook.com/groups/ancestralfoods/) பார்த்தபோது, ஆச்சரியமாக இருந்தது. உணவு மூலமாகவே சர்க்கரை நோயை ஏதோ சளி, காய்ச்சல்போல குணப்படுத்திக்கொண்ட இதன் எக்கச்சக்க உறுப்பினர்களின் மறுவாழ்வு அனுபவங்களை படிக்கப் படிக்க.. ஆச்சரியம் மெல்ல மெல்ல நம்பிக்கையாக நிலைகொண்டது.

என் நெருங்கிய வட்டத்திலும் இதன் உண்மைத் தன்மை நிரூபணமாகவும், கிட்டத்தட்ட 40,000 உறுப்பினர்கள் கொண்ட (இன்று 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்!) இந்த முகநூல் குழுவினர் சொல்லும் டயட்டின் பலன்கள் பலரையும் சென்று சேர வேண்டும் என்ற பேரார்வத்தில் தொடர்ந்து பேலியோ டயட் பற்றிய கட்டுரைகளை ‘மல்லிகை மகள்’ இதழில் வெளியிடத் தொடங்கி னோம்.

அதற்கு வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பு மகத்தானது. டயட் தொடங்கிய ஓரிரு வாரத்தில் ஃபாஸ்டிங் சுகர் இறங்கி 100 எனும் அளவுக்குள் வந்தவர்கள், டயட் தொடங்கிய மறுநாளே இன்சுலின் ஊசி அளவை குறைக்க நேர்ந்தவர்கள்.. என்று வாசகர்களின் அனுபவங்கள் பெருமகிழ்வைத் தந்தன. இதோ உங்கள் வாழ்விலும் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்த அவை தனி நூலாக வந்திருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
0
Search
X