சூப்பர் டேஸ்ட் ஸ்நாக்ஸ் வகைகள்

 50.00

Category:

Description

வீட்டில் இருந்தால் எதையாவது கொரித்துக் கொண்டே இருக்க விரும்புவது குழந்தைகள் மட்டுமல்ல; பெரியவர்களும்தான்!

எதிர்பாராத விருந்தாளிகளோ அல்லது ‘எதிர்பார்த்த’  உறவினர்களோ.. யார் வந்தாலும் அவர்களை வரவேற்று உபசரிக்க கைகொடுப்பதும் ஸ்நாக்ஸ்தானே!

என்னதான் நோட்டு நோட்டாக எண்ணிக் கொடுத்து பெட்டி பெட்டியாக கடையில் ஸ்நாக்ஸ் வாங்கி வந்தாலும், அது நாமே தயார் செய்ததுபோன்ற சந்தோஷத்தைத் தந்துவிடுவதில்லை. சுகாதாரத்துக்கும் உத்தரவாதம் இருப்பது இல்லை. இந்த உண்மை புரிந்தாலும், ஸ்வீட் ஸ்டால்களைத் தான் நாம் தஞ்சம் அடைகிறோம். காரணம், சுவை மாறாமல் செய்துவிட முடியுமா என்ற தயக்கம்.. கொஞ்சம் பிசகினாலும் மொத்தமும் வீணாகி விடுமே என்ற அச்சம்!

இந்த அச்சத்தையும் தயக்கத்தையும் உடைக்கவே  இந்நூல்!

செய்வதற்கு சுலபமான & அதிகம் செலவும் வைக்காத, உங்கள் கையாலே சுகாதாரமாக செய்து ருசிக்க இந்நூலில் 100 வகையான ஸ்நாக்ஸ்களின் ரெசிபிகள் அணிவகுக்கின்றன. இவை பல்வேறு கட்டங்களில் ‘மல்லிகை மகள்’ இதழில் வெளியாகி, வாசகிகளின் சமையலறையில் பாராட்டு பெற்றவை என்பது இவற்றின் சிறப்பம்சம்!

அன்னையின் அன்பு மொழியில் உங்களுக்கு இங்கே சொல்லித்தரப் போவது, சமையல் நட்சத்திரங்களான செஃப் தாமு, கலைச்செல்வி சொக்கலிங்கம், மீனா ராதாகிருஷ்ணன், நித்யா ரவி.. இவர்களோடு மல்லிகை மகளின் வாசகிகளும் களம் இறங்கி கலக்கியிருக்கிறார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சூப்பர் டேஸ்ட் ஸ்நாக்ஸ் வகைகள்”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
0
Search
X