நோய் தீர்க்கும் காய்கறிகள் – டயட் மருத்துவம் -பார்ட் 3

 50.00

இந்த நூலை படித்து முடிக்கும்போது, ‘போனால் போகிறது’ என்று தட்டில் இதுவரை நீங்கள் இடம் கொடுத்த காய்கறிகள், தட்டில் தனி மரியாதையுடன் வந்து அமரப் போவது உறுதி.

Category:

Description

‘டயட் மருத்துவம்’ நூல் வரிசையில் இது மூன்றாவது வெளியீடு. முதல் இரண்டு பாகங்களுக்கு வாசகர்கள் அளித்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, மூன்றாவது பாகமாக ‘நோய் தீர்க்கும் காய்கறிகள்’ நூல் மலர்ந்திருக்கிறது.

‘டயட் மருத்துவம்’ நூலில், எண்ணெய் முதல் வைட்டமின் சத்துகள் வரை நாம் அறிந்திருக்கவேண்டிய அடிப்படை உண்மைகளையும், சரிவிகித உணவு ரகசியங்களையும் விளக்கிய டயட்டீஷியன் ஷைனி சந்திரன், குழந்தைகள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை ‘யார், எப்போது, என்ன சாப்பிடலாம்?’ என்று சொன்ன ஆலோசனைகள் ‘டயட் மருத்துவம் : பார்ட் & 2’ நூலாக வெளியானது.

ஷைனி தந்த அறிவியல்பூர்வமான தகவல்களின் உண்மைத் தன்மைதான் இந்த வரிசை நூல்களின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமிருந்து ‘டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன்’ பட்டயம் பெற்ற முதல் இந்தியரான ஷைனியின் ‘க்ளையன்ட்’ பட்டியலில் விளையாட்டு வீரர்கள், திரைப்படப் பிரபலங்கள் என வி.ஐ.பி&க்கள் அதிகம் இருப்பதில் வியப்பில்லைதான்!

நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான காய்கறிகளை ஆய்வுத் தகவல் களோடு இதில் அலசுகிறார் ஷைனி. ஒவ்வொரு காயின் தன்மைகள், சத்துக்கள், அதை எப்படிப் பார்த்து வாங்குவது, எப்படி சமைப்பது, (சில வேளைகளில் எப்படிச் சமைக்கக் கூடாது என்பதும்கூட!), யாரெல்லாம் அந்தக் காயை அவசியம் சாப்பிட வேண்டும் (யாரேனும் தவிர்க்க வேண்டுமென்றால், அந்தத் தகவலும்..!) என்று நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களை எளிய மொழியில் விவரிக்கிறார்.

இந்த நூலை படித்து முடிக்கும்போது, ‘போனால் போகிறது’ என்று தட்டில் இதுவரை நீங்கள் இடம் கொடுத்த காய்கறிகள், தட்டில் தனி மரியாதையுடன் வந்து அமரப் போவது உறுதி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நோய் தீர்க்கும் காய்கறிகள் – டயட் மருத்துவம் -பார்ட் 3”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
0
Search
X