சிறுதானிய சமையல்
₹60.00
கம்பு, தினை, கேப்பை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு ஆகிய சிறுதானியங்கள் மனித ஆரோக்கியத்துக்கு அவசியமான நுண்ணூட்டச் சத்துகளை உள்ளடக்கியவை. மழை குறைவான வறட்சிக் காலத்தில் விளைவிக்கப்படும் இந்த தானியங்கள், அந்தச் பருவச்சூழல் காரணமாகவே உடலுக்கு உறுதி தரும் பல சத்துகளை (பாலிபினால்ஸ், டேனின்ஸ், பீட்டா கரோட்டின்ஸ், கரோடினாய்ட்ஸ், போன்றவை) தன்னுள் சேமித்து வைத்திருக்கும். ‘சாமை, கம்பு, கேழ்வரகு, தினை… இவை யாவும் அரிசி மற்றும் கோதுமையைக் காட்டிலும் இரும்புச்சத்து, கால்சியம் சத்து, நார்ச்சத்து, புரதச் சத்து மிக்கவை..’ என்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. உடலுக்கு அவசியமான முக்கிய அமினோ அமிலங்களை உள்ளடக்கிய இந்த சிறுதானியங்கள் நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கக் கூடியவை என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
நாம் வழக்கமாக செய்யும் சாதம் போலவே அனைத்து சிறுதானியங்களிலுமே செய்து சாம்பார், குழம்பு வகைகளுடன் ருசிக்கலாம். பெரியவர்களுக்கான உணவுகள் மட்டுமின்றி, குழந்தைகளும் ரசித்து ருசித்து சாப்பிடும் வண்ணம் வெரைட்டியான சிறுதானிய ஸ்நாக்ஸ் ரெசிபிகளும் இந்நூலில் அணிவகுக்கின்றன. செஃப் தாமு தொடங்கி சமையல் நிபுணர்களின் கைவண்ணங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ரெசிபிகள், உங்கள் சமையலறையில் என்றென்றும் தனி அரசாட்சி செய்யும்!
Reviews
There are no reviews yet.