உண்ணுவதெல்லாம் உணவல்ல!
₹100.00
வணிகமயமாகிவிட்ட இன்றைய நவீன உலகில் மிகப்பெரிய வர்த்தகப் பொருள் எது தெரியுமா?
மனித உடல்தான்!
எங்கோ பெருநகரங்களில் மட்டுமே மருத்துவமனைகள் இருந்த நிலைமை மாறி, இன்று ஊர் ஊருக்கு கிளினிக்குகள் பெருகிவிட்டன. பெட்டிக் கடைகளுக்கு நிகராக உடனடி பரிசோதனை மையங்கள் முளைத்துவிட்டன. அத்தனையும் வந்து மக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறதா என்றால், அவர்களின் பொருளாதாரம்தான் சுரண்டப்படுகிறது.
இந்த நிகழ்கால பேராபத்திலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள என்ன வழி?
இயந்திர வாழ்க்கை வாழும் நமக்கு இயந்திரக் கணக்கே வழி சொல்லும். ‘இன்புட்’&ஐ சரி செய்தால், ‘அவுட்புட்’ தானாகவே சரியாகிவிடும்! அப்படி நம் உடல் இயந்திரத்துக்கான உணவு முறைகளை சரிசெய்யும் வழிகளை சொல்லத்தான் இந்த நூல்!
பிரபல அக்கு ஹீலரும், மருத்துவம் என்ற பெயரில் மனிதகுலத்தின் மீது நடந்து வரும் மாபெரும் சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் போராளியுமான அ.உமர் பாரூக், ‘மல்லிகை மகள்’ இதழில் இதனை தொடராக எழுதியபோது வாசகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு.
போகிற போக்கில் ‘இந்த உணவு ஆபத்து’ என்று சொல்லி விட்டு விலகிவிடாமல், ஏன் என்று அதை ஆதாரப்பூர்வமாக விளக்குவதோடு, அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் மிக சுலபமான வழிமுறைகளையும் தாய்மை குணத்தோடு விவரிப்பதே இந்த நூலின் சிறப்பு. இது எல்லோருக்குமான எச்சரிக்கை மணி!
Reviews
There are no reviews yet.