எடையைக் குறைக்கும் பேலியோ டயட்!

 50.00

Category:

Description

தமிழகத்தில் பெரிய புரட்சியையே நிகழ்த்திவருகிறது பேலியோ டயட்!

முகநூலில் இந்த முழுக்கொழுப்பு உணவு முறையின் மகத்துவம் பற்றி அமெரிக்கவாழ் தமிழரான நியாண்டர் செல்வன் எழுத ஆரம்பித்தபோது, இதை சந்தேகக் கண் கொண்டு பார்த்தவர்கள்தான் அநேகம். மேலைநாட்டு மருத்துவ உலகம் செய்து வைத்திருக்கும் மூளைச்சலவையால், ‘கொழுப்பு சாப்பிட்டால் இதயநோய் வராதா?’ என்ற கேள்விதான் துருத்திக் கொண்டு வந்தது. ஆனாலும், ஒரு சிலர் தைரியமாக இதை முயற்சித்துப் பார்க்க, அதன்பின் அவர்களின் மருத்துவ அறிக்கைகளே நம்பிக்கை ஆதாரங்களாக ஒளிவீசத் தொடங்கின.

இந்நிலையில்தான் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என்று பல்வேறு நோய்களால் அவதிப்படும் தமிழக மக்களுக்கு இந்த டயட் போய்ச் சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ‘சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை’ என்ற நூலைக் கொண்டு வந்தோம். பல்லாயிரக்கணக்கானோரை ஆரோக்கியத்துக்கு மீட்டெடுத்த அந்த நூலைத் தொடர்ந்து, இதோ.. உடல் பருமன் என்னும் மெகா தொல்லையை விரட்டியடிக்க, புதியதொரு நூல் உங்கள் கரங்களில் தவழ்கிறது.

இந்த டயட் ஏதோ நம்பிக்கையில் சொல்லப்படும் விஷயமல்ல. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உணவுமுறை. மூன்று இலக்கத்துக்கு மேலான உடல் எடையிலிருந்து இயல்பு எடைக்கு  & துளிகூட சுருக்கம் இன்றி உருமாறிய பலரின் புகைப்படங்களே இதற்கு சாட்சி. அவர்களின் அனுபவங்களும் உள்ளே காத்திருக்கின்றன.

ஆரோக்கியத்தில் இங்கே புதுமறுமலர்ச்சிக்கு வித்திட்டிருக்கும் நியாண்டர் செல்வனை வாழ்த்தி, எடைகுறைப்பு பயணத்தை தொடங்குங்கள்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “எடையைக் குறைக்கும் பேலியோ டயட்!”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
3
Search
X