டயட் மருத்துவம்
பார்ட் – 1

 50.00

உண்ணும் உணவு மட்டும் சத்தானதாக, நம் உடலுக்கு ஏற்றதாக இருந்துவிட்டால், இந்தத் தொல்லைகளுக்கு எல்லாம் இடமில்லைதானே? அதற்கான நல்லதொரு வழிகாட்டியாகத்தான் இந்த நூல் மலர்ந்திருக்கிறது.

Category:

Description

நம் இல்லத்தரசிகளில் பெரும்பாலானவர்களுக்கு சமைப்பதைக் காட்டிலும் சிரமமான காரியம், என்ன சமைப்பது என்று திட்டமிடுவதுதான்!

இல்லத்தரசியின் நேரமின்மை, அன்றைய மனநிலை மற்றும் உடல்நிலை, வீட்டில் இருக்கும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்றவையே, பொதுவாக ஒரு வீட்டின் அன்றைய மெனுவை தீர்மானிக்கின்றன. ஆனால், அந்த மெனுவில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்குமா என்று கேட்டால், பெரும்பாலும் உதட்டு பிதுக்கல்தான் பதிலாக வரும். விளைவு? எதிர்ப்புச் சக்தி குறைந்து, அடிக்கடி மருத்துவ மனை பக்கம் ஒதுங்க வேண்டி வருகிறது. உணவுக்கு ஈடாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள நேர்கிறது. அதன் தொடர்ச்சியாக, பக்கவிளைவு அவஸ்தைகள் வேறு!

உண்ணும் உணவு மட்டும் சத்தானதாக, நம் உடலுக்கு ஏற்றதாக இருந்துவிட்டால், இந்தத் தொல்லைகளுக்கு எல்லாம் இடமில்லைதானே? அதற்கான நல்லதொரு வழிகாட்டியாகத்தான் இந்த நூல் மலர்ந்திருக்கிறது.

சமையலுக்கு திட்டமிடுவதில் துவங்கி, இன்றைய வாழ்க்கை முறைக்கான அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் வரை அனைத்தையும் இதில் எளிமையாக விளக்குகிறார், நட்சத்திரங்களின் உணவு ஆலோசகரும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான ஷைனி சந்திரன். உணவு முறை மாற்றம் மூலமே பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சமாளிக்கலாம் என அவர் கூறும் ஆலோசனைகள் இந்நூலின் சிறப்பம்சம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “டயட் மருத்துவம்
பார்ட் – 1”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
0
Search
X