உங்கள் வீட்டில் இருக்கவேண்டிய அவசியமான சித்த மருந்துகள்!

150.00

‘ஒவ்வொரு வீட்டிலும் பாராசிட்டமால், இருமல் சிரப்புகள் என்று நவீன மருந்துகள் இருப்பதுபோல், பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த முடிந்த சித்த மருந்துகளை அறிமுகப்படுத்தலாமே..’ என்ற ஒரு வேண்டுகோளைத் தொடர்ந்து மூத்த சித்த மருத்துவர் செல்வசண்முகம் வழங்கிய தகவல்கள்தான் தனி நூலாக வடிவம் பெற்றிருக்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ள சித்தர்களின் நூல்களிலிருந்தும் சித்த மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சக சித்த மருத்துவர்களின் அனுபவத்திலிருந்தும் பெறப்பட்ட மருத்துவக் குறிப்புகளை அலசி ஆராய்ந்து, இன்றைய ஆய்வுகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து, மிகவும் பொறுப்போடு வழங்கியிருக்கிறார்.
இந்த நூலின் முக்கிய நோக்கமே, பக்க விளைவில்லாத, குறைந்த விலையுடைய, தரமான மருந்துகளை மக்களுக்கு அறிமுகப் படுத்துவதாகும். குறைந்த மருத்துவச் செலவு, நோயின் தாக்கத்தை வேகமாக குறைப்பது, பக்கவிளைவு இல்லாமல் இருப்பது, அனைவருக்கும் தரமான மருந்துகள் கிடைப்பது என்பதே நலம் சார்ந்த பல மருத்துவ நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை எட்டுவதற்கு இந்த நூல் உதவும் என்று நம்புகிறோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உங்கள் வீட்டில் இருக்கவேண்டிய அவசியமான சித்த மருந்துகள்!”

Your email address will not be published. Required fields are marked *