மகளிர்
வைத்தியம்

 50.00

நம் பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளை எடுத்துச் சொல்லி ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்த நூல், ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணுகிறேன்.

Description

தலைவலி, காய்ச்சலுக்குகூட பிரமாண்ட மருத்துவமனை களையே தேடி ஓடும் கார்ப்பரேட் யுகம் இது. ஒருபுறம், பணம் கட்டுகட்டாக கரைய, தேவையற்ற பரிசோதனைகளால் நாம் நிரந்தர நோயாளிகளாகும் விபரீதங்களும் நடக்கின்றன.

முன்பெல்லாம் உடலுக்கு ஒன்று என்றால், அதன் அறிகுறிகளை வைத்தே வீட்டு வைத்தியம் சொல்லி தெம்பூட்ட கூடவே பெரியவர்கள் இருந்தார்கள். இன்றோ கணவன், மனைவி, குழந்தை என்றாகிப் போன நவீன மைக்ரோ குடும்பச் சூழலில் ஆலோசனை தரவே ஆளில்லாத நிலை. இதன் விளைவே, இல்லாத நோய்க்கு மருந்து சாப்பிட்டு, நோய்க்கு ‘வெல்கம்’ சொல்லும் விபரீதங்கள்!

இந்நிலையில், நம் பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளை எடுத்துச் சொல்லி ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்த நூல், ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணுகிறேன்.

மல்லிகை பிரசுர வெளியீடான ‘வைத்திய சமையல்’ நூலை வழங்கிய மூத்த சித்த மருத்துவர் டாக்டர் திருநாராயணனின் இரண்டாவது படைப்பு இது. மாதவிலக்கு பிரச்னைகள், சருமத் தொந்தரவுகள், கர்ப்பம், பிரசவம், பச்சிளம்குழந்தை பராமரிப்பு என பல்வேறு தலைப்புகளில் டாக்டர் திருநாராயணன் தரும் குறிப்புகள், பெண்களின் ஆரோக்கிய வாழ்க்கைப் பயணத்துக்கு உற்ற துணையாக விளங்கும். அதோடு, அனுபவசாலியான அம்மா அல்லது பாட்டி கூடவே இருக்கிற உணர்வையும் இந்த நூல் நிச்சயம் தரும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகளிர்
வைத்தியம்”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
0
Search
X