உடல் நலம் காக்கும் உணவு ரகசியங்கள்!
₹60.00
சாதாரண தலைவலி என்று போனாலே, ஒரு முழுநீளத்துக்கு பரிசோதனைகள் லிஸ்ட் தரப்படுவதும், மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டாலே மொத்த சேமிப்பையும் இழக்கத் தயாராக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதுமே இன்று மக்களுக்கு உணவு மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த போதுமான காரணங்களாகிவிட்டன.
உணவு பற்றிய அடிப்படை உண்மைகளை புரிந்துகொண்டால் போதும்.. எதை, எப்போது, எப்படி சாப்பிடுவது என்பது குறித்த ஒழுங்கு தானாகவே வந்துவிடும். நல்லுடல் நம் வசப்பட்டு விடும்.
உணவின் அடிப்படை விதிகள், சமையலில் மறக்கக் கூடாத 8 பொருட்கள், சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள், 21 நாட்களில் ஆரோக்கியத்துக்கு திரும்பும் அதிசயம், நோயற்ற நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம் தரும் பியோப்பி டயட், மாரடைப்பு மற்றும் கேன்சரிலிருந்து தப்பிக்க டிப்ஸ்.. என இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு தகவலுமே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மந்திரங்களாக ஒலிக்கும்!
Reviews
There are no reviews yet.