நியாண்டர் செல்வன்

ஆழ்ந்த உறக்கத்துக்கு அவசியமானது.. நம் பெருங்குடலில் உருவாகும் செரடோனின் என்னும் ஒருவகை கெமிக்கல்! உறக்கத்தை மட்டுமல்ல, நம் மனநிலையையும் மனஅழுத்தத்தையும் சீராக வைத்திருக்கவும் இது தேவை!

சரி, செரடோனின் அளவுகளை அதிகரிக்க வைக்க என்ன செய்யவேண்டும்?

செரடோனின் அளவு நம் கிரிகேடியன் ரிதத்தை அடிப்படையாக கொண்டது. சுருக்கமாக சொன்னால், வெளியுலகில் சூரிய வெளிச்சத்தில் எத்தனைகெத்தனை அதிக நேரம் கழிக்கிறோமோ அத்தனைக்கத்தனை நம் செரடோனின் அளவுகள் அதிகரிக்கும். அதிக நேரம் அறையில், மங்கலான வெளிச்சத்தில் அடைந்து கிடப்பது, நாள் முழுக்க அறையிலேயே இருப்பது ஆகியவை நம் செரொடொனின் அளவு களை குறைக்கும். இதை புரிந்து நடந்தாலே செரோடோனின் அளவு அதிகரிக்கும். உறக்கம் கண்களை தழுவும்.

அடுத்ததாக, உடற்பயிற்சி செரடோனின் அளவு களை அதிகரிக்க பயன்படும் மிக சிறப்பான சாதனம்.

உணவு மூலமும் செரடோனின் அளவை அதிகரிக்கலாம். ரைப்டொ பாபான் எனும் அமினோ அமிலம்தான் செரடோனினின் மூலப் பொருள். இது அமினோ அமிலம் என்பதால் புரதம் அதிகமுள்ள பின்வரும் உணவுகளில் இது காணப்படும்:

பாதாம் முதலான கொட்டை வகைகள், பால் பொருட்கள், மட்டன், சிக்கன் முதலான இறைச்சி வகைகள், முட்டை, மீன்.. குறிப்பாக, லாக்டல்புமைன் எனும் பால் புரதம் செரடோனினை அதிக அளவில் சுரக்க வைக்கும் தன்மை வாய்ந்தது. (இரவில் பால் குடித்துவிட்டு படுத்தால் உறக்கம் வரும் என்பது இதன் காரணமாகவே)!
கார்போஹைட்ரேட் உண்பதால் உடலில் இன்சுலின் அதிகரித்து, அதனால் அமினோ அமிலங்கள் செல்களுக்குள் விரட்டப்பட்டு ட்ரைப்டொபாபான் அதிக அளவில் செரொடொனினாக உருமாற்றப் படும். ஆனால், இரவில் ரத்த சர்க்கரை அளவுகளை ஏற்றிக்கொண்டு படுப்பது நல்லதல்லவே?

இயற்கையாக தினமும் நட்ஸ், இறைச்சி, முட்டை, காய்கறி முதலானவற்றை உண்டு, தினம் மதியம் வெயிலில் நின்று ‘வைட்டமின் டி’ பெற்று, வெளியே அதிக அளவில் நடமாடி, உடற்பயிற்சி செய்து, இரவு உறங்குமுன் ஒரு கப் பால் பருகிவிட்டு படுத்தால்.. செரடோனின் நமக்கு உறக்கத்தை வரவழைக்கும்.

நம் மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

About The Author