நோய் தீர்க்கும் உணவுகள்! – டயட் மருத்துவம் -பார்ட் 4

 50.00

Category:

Description

உடல் பருமன், முடி உதிர்தல், கொலஸ்ட்ரால் பிரச்னைகள் என்று பொதுவான பிரச்னைகள் தொடங்கி, சரிவிகித உணவு பற்றியும் உணவில் கையாளவேண்டிய முக்கியமான விதிமுறைகள் பற்றியும் முழுமையான தகவல்களோடு வெளிவந்தது, டயட் மருத்துவம் – முதல் வெளியீடு. இரண்டாவது வெளியீட்டில், குழந்தைகளுக்கு, டீன்-ஏஜ் பெண்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு, தாத்தா & பாட்டிகளுக்கு என்று பல்வேறு பருவத்தினருக்கான தனித்தனியான டயட்கள் இடம்பெற்றது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் தன்மைகளை விளக்கிய இதன் 3-வது பாகமான ‘நோய் தீர்க்கும் காய்கறிகள்’ நூல், காய்கறிகளின் ஊட்டச்சத்துகளை பயன்படுத்தி நோய்களிலிருந்து தப்பிக்கும் எளிமையான வழிகளை அடையாளம் சொன்னது.

மருந்து மாத்திரைகளால் மனம் நொந்துபோன நம் மக்களுக்கு இத்தனைக்குப் பிறகும் கேள்விகள் மிச்சமிருந்தன. ஜலதோஷம், காய்ச்சல், தொண்டைப் பிரச்னைகள், சருமப் பிரச்னைகள், பி.சி.ஓ.டி. நெஞ்செரிச்சல், காயங்கள், மாத்திரைகளின் பின்விளைவுகள்.. இவற்றுக்கெல்லாம் உணவு மூலம் நிவாரணம் பெற என்ன வழி என்று கேள்விகள் தொடர்ந்தன. அவற்றுக்கான பதிலாகத்தான், 4&வது பாகமாக வந்திருக்கிறது, ‘நோய்களிலிருந்து குணமாக்கும் உணவுகள்’.

இந்நூலை எழுதியிருக்கும் டாக்டர். வினிதா கிருஷ்ணன், உணவு மருத்துவத்தில் பி.ஹெச்டி முடித்தவர். மூளை பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரகம் செயலிழந்தவர்கள், இதய நோயாளிகள்.. இப்படி மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பவர்களுக்கு ட்யூப் மூலமாக உணவு தரும் உணவியல் மருத்துவர். உப்பு மற்றும் புரோட்டீன் அளவுகள் யார் யாருக்கு எவ்வளவு தேவை என்பதை உன்னிப்பாக கணித்து, நோயாளிகளின் உடலில் மருந்துகள் வேலை செய்வதற்கேற்ப உணவைத் தேர்ந்தெடுத்து தரும் நுட்பமான பணி இவருடையது. அதனால், இவர் தரும் ஆலோசனைகள் எத்தனை துல்லியமாக இருக்கும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நோய் தீர்க்கும் உணவுகள்! – டயட் மருத்துவம் -பார்ட் 4”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
1
Search
X