உணவே
மருந்து

(1 customer review)

 50.00

‘நாம் உண்ணும் உணவுதான் நாம் ஆவோம்’

Description

‘நாம் உண்ணும் உணவுதான் நாம் ஆவோம்’ என்கிறது ஆயுர்வேதம்.

உணவு சரியாக இருந்தால் மருந்து அவசியமில்லை. உணவு சரியாக இல்லாவிட்டால் மருந்தினால் எவ்வித உபயோகமும் இல்லை. நாம் சாப்பிடும் உணவே உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டால், அதைவிடச் சிறந்தது வேறெதுவாக இருக்கும்?

எந்தெந்த உணவுகள் என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும், அவற்றின் மூலம் ஆரோக்கியத்தையும் இளமையையும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைத் தான் இந்த நூல் விரிவாக கற்றுத் தருகிறது. ரசித்துப் படிக்க.. ருசித்துச் சாப்பிட.. நோயின்றி வாழ.. மிக எளிமையான சமையல் குறிப்புகளை வழங்கியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த ஆயுர்வேத நிபுணரான டாக்டர் சாந்தி விஜயபால்.

ஒரு டாக்டர் தரும் ரெசிபிகள் என்பதால், வெறும் குறிப்புகளாக இல்லாமல், கூடவே உணவுகளின் அடிப்படை குணங்கள் என்ன, அவற்றை ஆரோக்கியமாகச் சமைப்பது எப்படி என்ற மருத்துவ உண்மைகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு!

‘பொதுவாகவே ஒரு நோய் குணமாக வேண்டுமென்றால், உடலின் ‘வளர்சிதை மாற்றம்’ (மெட்டபாலிசம்) சரியாக வேண்டும். நன்கு பசித்து, பசி தீர சாப்பிட்டு, அந்த உணவு நன்கு செரித்து, செரித்த உணவின் சத்து உடலில் சேரவேண்டும். இதுதான் மெட்டபாலிசம்..’ என்கிற டாக்டர் சாந்தி விஜயபால் அதற்கான டிப்ஸ்களையும் நூல் முழுக்க அள்ளி வழங்கியிருக்கிறார்.

Additional information

Color

Blue

1 review for உணவே
மருந்து

  1. sivagnanam

    Good Book

Add a review

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
2
Search
X