சூப்பர் டேஸ்ட் சிறுதானிய சமையல்

 50.00

Category:

Description

நம் முன்னோர்களின் தினசரி உணவுப் பழக்கத்தில் இடம்பிடித்திருந்த சிறுதானிய உணவுகள் நம் சமையலறையை விட்டு வெளியேறி வெகுகாலம் ஆகின்றன. பாலீஷ் செய்யப்பட்டு, சத்தெல்லாம் உதிர்ந்து, வெறும் சக்கையாகிப் போன அரிசி உணவுகளே நம் விருப்ப உணவுகள் ஆயின. ஆனால், பெருகி வரும் நோய்களும் அவற்றின் தீவிரமும் இப்போது நம்மை மீண்டும் சிறுதானியங்களை நோக்கி நகர்த்தி வருகின்றன. மாறி வரும் சூழலுக்கேற்ப, அனைத்து டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் சிறுதானியங்கள் இன்று கொலு வீற்றிருக்கின்றன.

கம்பு, தினை, கேப்பை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு ஆகிய சிறுதானியங்கள் மனித ஆரோக்கியத்துக்கு அவசியமான நுண்ணூட்டச் சத்துகளை உள்ளடக்கியவை. மழை குறைவான  வறட்சிக் காலத்தில் விளைவிக்கப்படும் இந்த தானியங்கள், அந்தச் பருவச்சூழல் காரணமாகவே உடலுக்கு உறுதி தரும் பல சத்துகளை (பாலிபினால்ஸ், டேனின்ஸ், பீட்டா கரோட்டின்ஸ், கரோடினாய்ட்ஸ், போன்றவை) தன்னுள் சேமித்து வைத்திருக்கும். ‘சாமை, கம்பு, கேழ்வரகு, தினை… இவை யாவும் அரிசி மற்றும் கோதுமையைக் காட்டிலும் இரும்புச்சத்து, கால்சியம் சத்து, நார்ச்சத்து, புரதச் சத்து மிக்கவை..’ என்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. உடலுக்கு அவசியமான முக்கிய அமினோ அமிலங்களை உள்ளடக்கிய இந்த சிறுதானியங்கள் நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கக் கூடியவை என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

நாம் வழக்கமாக செய்யும் சாதம் போலவே அனைத்து சிறுதானியங் களிலுமே செய்து சாம்பார், குழம்பு வகைகளுடன் ருசிக்கலாம். பெரியவர்களுக்கான உணவுகள் மட்டுமின்றி, குழந்தைகளும் ரசித்து ருசித்து சாப்பிடும் வண்ணம் வெரைட்டியான சிறுதானிய ஸ்நாக்ஸ் ரெசிபிகளும் இந்நூலில் அணிவகுக்கின்றன. செஃப் தாமு தொடங்கி சமையல் நிபுணர்களின் கைவண்ணங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ரெசிபிகள் உங்கள் சமையலறையில் என்றென்றும் தனி அரசாட்சி செய்யும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சூப்பர் டேஸ்ட் சிறுதானிய சமையல்”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
2
Search
X