மூட்டு வலியிலிருந்து முழுமையான விடுதலை

 50.00

நவீன மருத்துவம் முன்வைக்கும் தகவல்களை விவரிப்பதோடு, நம் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் சொல்லும் செலவே இல்லாத, மிக எளிய வழிகளைக் காட்டுவதுதான் இந்நூலில் சிறப்பம்சம்.

Description

நாற்பது வயதை நெருங்கிவிட்டாலே.. குறிப்பாக, பெண்கள் அடிக்கடி முனகும் ஒரு வார்த்தையாகிவிட்டது மூட்டுவலி.

தரையில் உட்கார்ந்து எழுவதோ, மாடிப்படி ஏறி இறங்குவதோ, நின்றுகொண்டு வேலை செய்வதோ.. தினசரி பணிகளை செய்வதே அவர்களுக்கு சிரமமான காரியமாகிவிடுகிறது. மாறிப்போன வாழ்வியல் அம்சங்கள், வயதாவது, அதிக உடல் பருமன், ஹார்மோன் பிரச்னைகள் என்று இதற்கு பல காரணங்கள்.

சரியான நிபுணர்களை கண்டடைந்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும் தான். ஆனால், இன்றைய சமூகச் சூழலில் அதுதானே சிக்கலான விஷயமாக உள்ளது. விளைவு? எவ்வளவு செலவு செய்தாலும் பிரச்னைகள் தீர்வதே இல்லை. மாறாக, தொடர் வாடிக்கையாளர்களாக, தொடர் நோயாளிகளாக ஆகிப்போகும் அவல நிலை! இதனால், அவரவர் ஆரோக்கியம் காக்க அவரவரே விழிப்பு உணர்வு பெறவேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், செலவில்லாத ஆரோக்கிய தீர்வுகளை முன்னிறுத்தி மலிவு விலையில் தரமான நூல்களை வெளியிட்டு வரும் மல்லிகை பிரசுரம், இதோ மூட்டுவலிக்கான எளிய தீர்வுகளோடு ஒரு நூல் கொண்டு வந்திருக்கிறது.

நவீன மருத்துவம் முன்வைக்கும் தகவல்களை விவரிப்பதோடு, நம் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் சொல்லும் செலவே இல்லாத, மிக எளிய வழிகளைக் காட்டுவதுதான் இந்நூலில் சிறப்பம்சம். எலும்பு ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் டி&யை சூரிய ஒளியிலிருந்தே நாம் பெற்றுவிட முடியும் என்பது தொடங்கி, கால்சியம் மாத்திரைகள் தேவையா, மூட்டுவலி உள்ளவர்கள் செய்யவேண்டியது, செய்யக் கூடாதது, எளிமையான வீட்டு வைத்திய முறைகள், உணவே மருந்தாக செய்துகொள்ளவேண்டிய மாற்றங்கள் என்று மூட்டு வலியிலிருந்து விடுதலை பெற பல்வேறு வழிமுறைகள் உள்ளே அணிவகுக்கின்றன. இளையோர் பின்னாளில் மூட்டுவலி வராமல் தற்காத்துக் கொள்வதற்கான குறிப்புகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

இங்கே அறிவுரைகள் வழங்கியிருக்கும் ஒவ்வொருவருமே தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் என்பது இவற்றின் நம்பகத்தன்மைக்கு சான்று.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மூட்டு வலியிலிருந்து முழுமையான விடுதலை”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
5
Search
X